கொரோனா வைரஸால் தமிழ் நடிகர் வெங்கட் சுதா மரணம் அடைந்திருப்பது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Venkat Suba Passes Away : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்குதலில் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 400 க்கும் அதிகமான உயிரிழந்து வருகின்றனர்.

கொரோனா வைரஸால் பிரபல நடிகர் வெங்கட் சுபா மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி.!!

தொடர்ச்சியாக திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்து வருவதும் தொடர்கதையாகி வருகிறது. எஸ் பி பாலசுப்ரமணியம் முதல் இயக்குனர் கேவி ஆனந்த் விவேக் என இந்த லிஸ்ட் தொடர்ந்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகர் கொரானா வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளார்.

அதாவது மொழி, அழகிய தீயே, கண்டா நால் முதல் என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும் சின்னத்திரை சீரியலிலும் நடித்துள்ளார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

இவருடைய மரணம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.