தமிழ் சினிமாவிற்கு புதிய முயற்சி என மாநாடு படம் பற்றி வெங்கட் பிரபு புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

Venkat Shares Maanadu Secrets : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு.

இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க சுரேஷ் காமாட்சி மிகுந்த பொருட் செலவில் படத்தை தயாரித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, மனோஜ் பாரதிராஜா, ஒய் ஜி மகேந்திரன், எஸ் ஏ சந்திரசேகர் என பல திரையுலக பிரபலங்கள் நடித்துள்ளனர். சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவுக்கே புதிய முயற்சி.. மாநாடு படம் பற்றி செம மாஸ் தகவலை வெளியிட்ட வெங்கட் பிரபு.!!

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து நேற்று பூஜையுடன் டப்பிங் பணிகள் தொடங்கியதை படக்குழுவினர் புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ரசிகர்களுடன் உரையாடிய வெங்கட்பிரபு மாநாடு திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய ரீச் கிடைக்க சிம்பு தான் காரணம் என கூறியுள்ளார். சிம்பு இல்லாமல் வேறு யாராவது நடித்திருந்தால் இந்த படம் இவ்வளவு ரீச் பெற்றிருக்காது.

மாநாடு திரைப்படம் எங்களுக்கு புதிய முயற்சி.. எங்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கும் இது ஒரு புதிய முயற்சி. ரசிகர்களுக்கு செய்யும் மாநாடு திரைப்படத்தை ரசிப்பார்கள் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.