பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வெங்கட் விலக அவருக்கு பதிலாக நடிக்க போவது யார் என்பது தெரிய வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிகளின் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மூன்று துண்டுகளாக பிரிந்துள்ள நிலையில் விரைவில் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்த நிலையில் கிழக்கு வாசல் சீரியலில் சஞ்சீவ்க்கு பதில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் வெங்கட் நடிக்க ஒப்பந்தமாக இருப்பதன் காரணமாக அவர் இந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இனி வெங்கட்டுக்கு பதில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருண் பிரசாத் நடிக்க உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஏற்கனவே பட வாய்ப்பு காரணமாக கண்ணன் இந்த சீரியலில் இருந்து விலக உள்ள நிலையில் தற்போது ஜீவாவும் விலக இருப்பதால் சீரியல் மீதான ஆர்வத்தை குறைத்து வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.