Venkat Prabhu Wishes to KL Praveen

இது உங்களுக்கு நூறாவது படம் என மாநாடு பட இயக்குனர் வெங்கட்பிரபு ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

Venkat Prabhu Wishes to KL Praveen : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் தற்போது மாநாடு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த வெங்கட்பிரபு சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தற்போது படத்தின் எடிட்டிங் வேலைகளை எடிட்டர் கே எல் பிரவீன் கவனித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது வெங்கட்பிரபு தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் நீயும் நானும் ஒன்றே ஒன்றாகத்தான் தொடங்கினார். சென்னை-28 படம் முதல் 50வது படம் இணைந்து பணியாற்றினோம். தற்போது உனக்கு மாநாடு நூறாவது படம். நாம் இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்ற வேண்டும். ஆண்டவன் அருள் புரியட்டும் என பதிவு செய்துள்ளார்.

என் திறமை மீது, டிராவிட்டுக்கு நம்பிக்கை உண்டு : ‘ஆட்டநாயகன்’ தீபக் சாஹர்

இந்த பதிவை பார்த்த சிம்பு ரசிகர்கள் கே எல் பிரவீனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மாநாடு திரைப்படம் ஆயுதபூஜை விருந்தாக அக்டோபர் மாதத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா இரண்டு வருடங்களுக்கு Busy – மகிழ்ச்சியில் ரசிகர்கள்..! | Kollywood | Tamil News | Viral HD