Venkat Prabhu Wishes About Siblings Day
Venkat Prabhu Wishes About Siblings Day

தல தளபதி ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உடன்பிறப்பு தின வாழ்த்து கூறியுள்ளார் பிரபல இயக்குனர்.

Venkat Prabhu Wishes About Siblings Day : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்கள் இருவருமே நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

ஆனாலும் இவர்களின் ரசிகர்கள் எப்போதும் எலியும் பூனையும் ஆகவே இருந்து விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று உடன்பிறப்பு தினம் என்பதால் இயக்குனர் வெங்கட்பிரபு மங்காத்தா சூட்டிங்கின் போது அஜித் மற்றும் விஜய் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

மேலும் யாரையும் வெறுக்காதீர்கள் அன்பை பரப்புங்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.