மாநாடு படத்தை இயக்க வெங்கட் பிரபு வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பதைக் கேட்டு ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.

Venkat Prabhu Salary for Maanadu : தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து இருந்தார்.

ஸ்ரீ ரமணர் உபதேசித்த மோட்ச மந்திரம் கேளாயோ.!

மாநாடு படத்தை இயக்க வெங்கட் பிரபு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?? ரசிகர்களை வாய் பிளக்க வைத்த தகவல்

கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இதுவரை மாநாடு திரைப்படம் 80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து உள்ளது. படத்தின் பட்ஜெட்டை விட இரு மடங்கிற்கும் அதிகமாக லாபம் எடுத்துள்ளது.

தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த படத்திற்காக வில்லனாக நடித்த எஸ் ஜே சூர்யா 4 கோடி சம்பளமாக வாங்கியதாக தகவல் வெளியாகியிருந்தது. படத்தை இயக்கிய வெங்கட்பிரபு அவரை விட அதிகமாக சம்பளம் வாங்கி உள்ளார் என தெரியவந்துள்ளது.

நிறைய Roles-லாம் நான் Avoid பண்ணேன் – Interview With Gurusomasundaram and Babu Thamizh.!

மாநாடு படத்தை இயக்க வெங்கட் பிரபு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?? ரசிகர்களை வாய் பிளக்க வைத்த தகவல்

ஆமாம் வெங்கட்பிரபு இந்த படத்தை இயக்குவதற்காக ரூபாய் 5 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் மாநாடு படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.