மங்காத்தா திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை, ஏமாற்றி விட்டது என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

Venkat Prabhu Review on Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் வலிமை. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து லாபம் பார்த்தது. ஸ்டன்ட் காட்சிகள் படு பிரமாதமாக இருந்ததாக பலரும் பாராட்டி வந்தனர்.

எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.‌.. வலிமை ஏமாத்திடுச்சு - மங்காத்தா இயக்குனர் வெங்கட் பிரபு அளித்த ஷாக் பேட்டி

இந்த நிலையில் தற்போது மன்மதலீலை படத்தின் புரமோஷனுக்காக வெங்கட்பிரபு அளித்த பேட்டி ஒன்றில் வலிமை படம் திருப்தி தரவில்லை, ஏமாற்றத்தை கொடுத்துவிட்டதாக கூறியுள்ளார். படம் நன்றாக இருந்தது ஸ்டண்ட் காட்சிகள் வேற லெவலில் இருந்தன. ஆனாலும் வினோத்தின் முந்தைய படங்கள் பூர்த்தி செய்த எதிர்பார்ப்பை வலிமை திரைப்படம் செய்யவில்லை என கூறியுள்ளார்.

எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.‌.. வலிமை ஏமாத்திடுச்சு - மங்காத்தா இயக்குனர் வெங்கட் பிரபு அளித்த ஷாக் பேட்டி

வெங்கட் பிரபு இவ்வாறு கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலு அஜித்துக்காக மங்காத்தா-2 கதை ரெடி எனவும் அஜித் ஓகே சொன்னால் உடனே இயக்க தயார் எனவும் வெங்கட்பிரபு ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.