Mankatha 2

Mankatha 2 : தல அஜித்தை வெங்கட் பிரபு சந்தித்து பேசியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்திருந்த மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

இதனால் அஜித் ரசிகர்கள் தற்போது வரை மங்காத்தா 2 எப்போது என தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகின்றனர்.

ஆட்டைய போட்ட பிந்து, பப்ளிக்காக போட்டுடைத்த மஹத் – புகைப்படத்தை பாருங்க.!

சமீபத்தில் வெங்கட் பிரபுடன் அஜித்துடன் மீண்டும் இணைவேன். அது மங்காத்தா 2 படமாகவும் இருக்கலாம் என கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு தல அஜித் சந்தித்து பேசியுள்ளார். அதன் பின்னர் அந்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

இதனால் தல ரசிகர்கள் உற்சாகமடைந்த மங்காத்தா 2 ரெடி என கொண்டாடி வருகின்றனர். அஜித்தும் வெங்கட் பிரபுவும் இணையும் படம் தல 61 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.