ரோபோ சங்கரை விட மோசமாக உடல் எடை குறைந்து ஒல்லியாகி உள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கி வரும் இவர் தற்போது தெலுகுவில் நாகசைத்தான்யாவை வைத்து கஸ்டடி என்ற படத்தை இயக்கி உள்ளார்.

இந்த படத்தின் இசை கோர்க்கும் வேலைகளுக்காக யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து துபாயில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அப்டேட் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் வெங்கட் பிரபு உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியாக காணப்படுவது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.