வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படம் பற்றி வெளியான தகவல் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Venkat Prabhu in New Movie Update : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

மாநாடு படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கும் புதிய படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படம் பற்றி வெளியான அதிரடி தகவல் - ஹீரோ யார்?

அதாவது சிலம்பரசன் டி.ஆர் நடிக்கும் ‘மாநாடு’ இயக்கி வரும் இயக்குனர் வெங்கட்பிரபு அதனை தொடர்ந்து தயாரிப்பாளர் T.முருகானந்தம் அவர்களின் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். இவர் இயக்கத்தில் உருவாகும் 10வது திரைப்படம் இது.

படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.