இங்கிலீஷ் தலைப்பு வைத்ததற்கு காரணம் இதுதான் எனக் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பின் கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு லைலா ஜெயராம் பிரேம்ஜி போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாக போகும் இந்த படத்தின் என் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது. இந்நிலையில் வெங்கட் பிரபு தி கோட் என்ற தலைப்பு வைத்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
அதில், பான் இந்தியா படமாக இருப்பதால்தான் இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்று வெங்கட் பிரபு விளக்கம் கொடுத்துள்ளார். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.