கோட் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை வெங்கட் பிரபு அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் கோட் திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது.
இந்தப் படத்தில் சினேகா, பிரசாந்த், பிரபுதேவா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரசிகர்களுக்கு விருந்தாக கோட் படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்பதை வெங்கட் பிரபு அறிவித்துள்ளார், அதாவது படம் ரிலீஸ்க்கு பத்து அல்லது 15 நாட்களுக்கு முன்னால் ட்ரெய்லர் ரிலீஸ் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களிடையே பெரும் கொண்டாட்டத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.