Venkat Prabhu About Vijay
Venkat Prabhu About Vijay

மங்காத்தா படத்தை பார்த்துவிட்டு விஜய் விருந்து வைத்து உருவாக்கும் கொடுத்துள்ளார் என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

Venkat Prabhu About Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் தற்போது நடிகர் சிம்புவை வைத்து மாநாடு என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பல்வேறு விஷயங்களைப் பேசினார். தன்னுடைய சென்னை-28 படத்திற்கு சிம்பு செய்த உதவிதான் நான் என்று சினிமாவில் இருக்க காரணம் என கூறியிருந்தார்.

மேலும் அஜித்தை வைத்து இயக்கிய மங்காத்தா படத்தை பார்த்துவிட்டு விஜய் செய்த விஷயத்தைப் பற்றியும் அவர் பேசியுள்ளார்.

மங்காத்தா திரைப்படம் தளபதி விஜய் புலி கிலி பிடித்துவிட்டது. படத்தைப் பார்த்துவிட்டு அவர் என்னை வீட்டிற்கு அழைத்து மிகப்பெரிய விருந்து வைத்தார்.

ஒயாத பிகில் சாதனை.. மீண்டுமொரு பிரம்மாண்ட சாதனை படைத்த பாடல் – செம மாஸ் தகவல் இதோ!

மேலும் ஒரு நல்ல கதையோட வாங்க கண்டிப்பா படம் பண்ணலாம் என்றும் வாக்கு கொடுத்தார். விரைவில் ஒரு நல்ல கதையுடன் விஜயை சந்தித்து அவரிடம் கூறுவேன்.

இந்தப்படம் விஜய் ரசிகர்களுக்கு செம மாஸ் ட்ரீட் ஆக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்‌. ஒருவேளை அது மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகமாக கூட இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அப்படி மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தில் அஜித்தும் விஜய்யும் இணைந்து நடித்தால் நிச்சயம் உலக அளவில் அப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் படமாகவே இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.