அஜித் குறித்த சுவாரஸ்ய தகவலை வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக போகும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.இந்தப் படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு சுவாரஸ்யமான தகவல்கள் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், மங்காத்தா படத்தை இயக்கும் போது அஜித் அடுத்ததாக விஜயை வைத்து படம் பண்ணு நல்லா இருக்கும் என்று சொன்னார். கோட் படத்தை இயக்குவது குறித்து சொல்லும் போது சூப்பர், மற்றும் மங்காத்தாவை போல் நூறு மடங்கு இருக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். எவ்வளவு பெரிய மனசு இருந்தால் இது போன்ற வார்த்தை வரும் என்று வெங்கட் பிரபு நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
வெங்கட் பிரபு சொன்ன இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.