பா ரஞ்சித் குறித்து பேசி உள்ளார் வெங்கட் பிரபு.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் தளபதி விஜயின் நடிப்பில் கோட் என்ற திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன அந்த வகையில் வெங்கட் பிரபு பா ரஞ்சித் குறித்து பேசி உள்ளார்.
பா ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் மற்றும் சார்பட்டா பரம்பரை படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும், கமர்ஷியல் படங்களை எடுக்க வேண்டும் அவருக்குள் ஒரு கமர்ஷியல் இயக்குனர் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.இது மட்டுமில்லாமல் அவர் படங்கள் பேசும் அரசியல் எனக்கு புரியவில்லை, எனக்கு அரசியல் எல்லாம் தெரியாது கமர்ஷியல் படம் அவர் எடுத்தால் நல்லா இருக்கும் என்று கூறியுள்ளார்.
வெங்கட் பிரபு விட உதவி இயக்குனராக பா. ரஞ்சித் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.