மங்காத்தா மற்றும் கோட் படம் குறித்து பேசி உள்ளார் வெங்கட் பிரபு.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் அவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம் கல்பாத்தி எஸ் சுரேஷ் கல்பாத்தி எஸ் கணேஷ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு 25 ஆவது படம் கோட் என அனைவரும் அறிந்ததே.
இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா ,ஜெயராம் ,லைலா, யோகி பாபு, பார்வதி நாயர், VTVகணேஷ் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களுடைய அதிகரித்து வருகிறது.
இந்த படம் கொடுத்த சுவாரசிய தகவல்கள் அடிக்கடி வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெங்கட் பிரபு மங்காத்தா படத்திற்கும் போத் படத்திற்கும் உள்ள வித்தியாசத்தை கூறியுள்ளார்.
அதில் மங்காத்தா முழுக்க முழுக்க ஆண்களுக்கான படம் என்றும் நண்பர்கள் மோசமாக ஒருத்தரை ஒருத்தர் ஏமாற்றிக் கொள்ளும் காட்சி ஒரு படமாக இருந்தது. ஆனால் கோட் காந்தி என்பவரின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு பகுதியை காட்டும் படமாக இருக்கும். ஒரு ஆண் அவர் குடும்பத்தை மையமாக எடுத்த படம் தான் கோட் என்று கூறியுள்ளார்.
இந்த தகவல் வெளியாகிய இணையத்தில் படு வைரலாகி வருகிறது.