Venkat Prabhu About Maanaadu Release Date

மாநாடு படத்தின் ரிலீஸ் தேதி என்ன என்ன என வெங்கட் பிரபு பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

Venkat Prabhu About Maanaadu Release Date : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் ரீலீஸ் குறித்த அறிவிப்பு வெளியானது.

ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து சிலம்பரசனின் நடிப்பில் “மாநாடு” படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரிய தர்ஷன் நடிக்க உள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் பாரதி ராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி நடிக்கிறார்கள்.இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

படப்பிடிப்பின் இறுதி கட்ட நிலையில் படக்குழுவினர் ஃபஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை வெளியிடப்பட்டனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது‌. பொங்கலை முன்னிட்டு மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் கையில் துப்பாக்கியுடன் அரசியல் மாநாட்டில் சிம்பு இருக்க வெடிகுண்டு வெடிக்கிறது. யுவன் இசையில் வெளிவந்த மோஷன் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் பரவி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

சிம்புவின் பிறந்த நாள் அன்று ஏ.ஆர்.ரஹ்மான் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். இந்த டீசர்
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிம்பு நடிக்கும் மாநாடு படத்தினை தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் மாநாடு ரீலீஸ் அறிவிப்பு என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு கூறுகையில் படப்பிடிப்பு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் கிளைமாக்ஸ் காட்சிகள் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் பகுதியில் படமாக்க பட வேண்டும். இறுதி கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் மாநாடு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.
இதனால் சிம்புவின் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டுள்ளார்கள்.