ரோஜா சீரியலில் இருந்து விலக என்ன காரணம் என வெங்கட் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Venkat Clarification on Roja Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வெங்கட். சன் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றிய இவர் அதன் பின்னர் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார்.

ஒவ்வொரு பாராட்டும், வீரர்கள் மற்றும் ஊழியர்களையே சேரும் : கேப்டன் டோனி

ரோஜா சீரியலில் இருந்து விலக இதுதான் காரணம் - நடிகர் வெங்கட் கொடுத்த அதிர்ச்சி பேட்டி.!!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் இவருக்கென நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் இவர் டிஆர்பியில் நம்பர் 1 இடத்தில் இருந்து வரும் ரோஜா சீரியலில் இருந்து திடீரென விலகினார். அவருக்கு பதிலாக தற்போது வேறு ஒரு நடிகர் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் இந்த சீரியலில் இருந்து விலகியது ஏன் என கூறியுள்ளார்.

தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 20 நாட்கள் தனிமைப் படுத்திக் கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார். தனிமையில் இருந்த பதில் எந்தவித பிரச்சினையும் இல்லை. அதன் பின்னர் தான் அதன் தாக்கம் தெரியவந்தது. நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டதாக கூறியுள்ளார். இதனால் பாண்டியன் ஸ்டோர் மற்றும் ரோஜா சீரியல் சூட்டிங் நேரம் மாற்றப்பட்டது என தெரிவித்துள்ளார். என் காரணமாக கடினப்பட்டு நடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

Trailer-ல இருக்குற அளவுக்கு ஒன்னுமே இல்ல – Rudra Thandavam Public Review

மேலும் இன்னொரு காரணமாக ரோஜா சீரியலில் தன்னை இரண்டாம் பட்சமாகவே நடத்தியதாக தெரிவித்துள்ளார். ஒருநாள் கூட தன்னை புரோமோ வீடியோவில் காட்டவில்லை. இதுவும் அந்த சீரியலில் இருந்து விலக இன்னொரு காரணம் என தெரிவித்துள்ளார்.