
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் வெங்கட் பிரபுவும் ஒருவர். இவரது இயக்கத்தில் பார்ட்டி என்ற படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இந்த படத்தை அடுத்து சிம்புவை வைத்து மாநாடு என்ற படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் வெங்கட் பிரபு தன்னுடைய 16 வயது மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை கூறி இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றினை பதிவிட அது இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.
வெங்கட் பிரபுவின் மகளுடைய புகைப்படம் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் பலரும் வெங்கட் பிரபுவிற்கு இவ்வளவு பெரிய மகளா என வியந்து வருகின்றனர்.