வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிப்பது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Vendhu Thanindhathu Kaadu Heroine Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.

வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிப்பது யார் தெரியுமா?? வெளியான அதிரடி அப்டேட்

இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் உருவாகவுள்ள வெந்து தணிந்தது காடு படத்தில் நடிக்கிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். தற்போது படத்தின் படப்பிடிப்புகள் திருச்செந்தூர் பகுதியில் நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ.19,500 கோடி பரிமாற்றம் : பிரதமர் மோடி விடுவிப்பு

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சென்னை மற்றும் மும்பையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. சிம்புவுக்கு ஜோடியாக மராத்திய இளம் நடிகையான கயாடு லோகர் என்பவர் நடிக்க உள்ளார். மூன்று மாதங்களில் படத்தினை முழுவதுமாக முடிக்க கௌதம் மேனன் திட்டமிட்டு உள்ளார்.

அஜித் படத்தில் அறிமுகமான நடிகையின் வித்தியாசமான Yoga – Shock-ஆன ரசிகர்கள்..! | Viral Post | Ajith HD

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.