Vendakkai Mor Kulambu : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Dinner Ideas, Easy Recipe

Vendakkai Mor Kulambu :

தேவையான பொருட்கள் :

வெண்டைக்காய் – கால் கிலோ,
தக்காளி – ஒன்று,
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
வெங்காயம் – 2,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
தயிர் – ஒரு கப்,
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
நெய் – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

1) வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். தயிரை நன்றாக கடைந்து வைக்கவும்.

2) வெண்டைக்காயை கழுவி துடைக்கவும். பின்னர் நடுவில் கீறி விதையை எடுத்து விடவும்.

3) தட்டில் சிறிதளவு மிளகாய்த்தூள், கொத்தமல்லி, மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். இந்த கலவையை கீறிய வெண்டைக்காயில் தடவவும்.

4) கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மசாலா தடவிய வெண்டைக்காயை போட்டு, சிறு தீயில் வதக்கி, வெந்தவுடன் எடுத்து தனியே வைக்கவும்.

5) கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், இஞ்சி – பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.

உடலுக்கு ஆரோக்கியமான வெற்றிலை ரசம் தயார் செய்வது எப்படி பார்ப்போமா!

6) பின் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, மீதமுள்ள கரம்மசாலா, மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகாய்த் தூள், மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.

7) அதில் வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்து, நன்கு கிளறி, தீயை அணைத்து, தயிரை அதில் சேர்த்து கலந்து, மறுபடியும் அடுப்பில் வைத்து சிறுதீயில் கொதிக்கவிடவும்.

8) ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here