Velayutham

Velayutham Shooting Spot : வேலாயுதம் படப்பிடிப்பின் போது தல அஜித் பிரபல நடிகரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இந்த தகவல்களை அப்படத்தில் நடித்திருந்த பிரபல நடிகர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு பிறகு முக்கிய நடிகர்களாக வலம் வருபவர் அஜித் மற்றும் விஜய். இவர்களுடன் நடித்த நடிகர் நடிகைகள் தாங்கள் அளிக்கும் பேட்டிகளில் அந்த அனுபங்களை பகிர்ந்து கொள்வது என்பது வழக்கமான ஒன்று.

தற்போதும் அப்படி தான் வேலாயுதம் படத்தில் விஜயுடன் நடித்திருந்த போண்டா மணி அவர்கள் அஜித்தை பற்றி சில சுவாரஷ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதாவது, பென்னி மில்லில் வேலாயுதம் படப்பிடிப்பு நடந்த போது நான் பிச்சைக்காரன் வேடத்தில் இருந்தேன். அங்கு அஜித் படத்தினுடைய படப்பிடிப்பும் நடந்தது.

அப்போது அஜித் அந்த பிச்சைக்கார வேடத்தில் என்னை அடையாளம் கண்டு பிடித்து விட்டு நேரில் வந்து என்னிடம் நலம் விசாரித்தார்.

அதன் பின்னர் நான் பிச்சைக்கார வேடத்தில் இருந்ததால் அவரே எனக்கு ஸ்பூனில் சாப்பாடும் ஊட்டி விட்டார் என கூறியுள்ளார்.

Bonda mani

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.