வேலவன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் பேச்சு

நிறைந்த தரம் குறைந்த விலை இதுதான் எங்கள் கொள்கை எனவும் உங்களது வெற்றிக்கு காரணம் என்ன என்பது குறித்தும் பேசியுள்ளார் வேலவன் ஸ்டோர்ஸ் உரிமையாளர்.

தூத்துக்குடியில் மிகவும் பிரபலமான கடை களில் ஒன்றாக இருந்து வருவது வேலவன் ஸ்டோர்ஸ். ஆடை முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடக்கும் கடை என்பதால் தூத்துக்குடியில் வேலவன் ஸ்டோர்ஸ்க்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

தற்போது இதன் கிளை சென்னை டிநகரில் உஸ்மான் ரோட்டில் ஏழு அடுக்கு தளத்துடன் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. தீபாவளி சிறப்பு விற்பனை தொடர்ந்து பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடிய போராளிகளான காவல் துறை, தூய்மைப் பணியாளர்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு தள்ளுபடிக்கு மேல் 10 சதவீத தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியான நிலையில் வேலவன் ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த் அவர்கள் பேசியதாவது, நாங்களும் அடித்தட்டு குடும்பத்தில் இருந்து வளர்ந்து வந்தவர்கள் தான்.

மேலும் ஸ்டோர் கடை சிங்கிள் ஓனர் கட்டுபாட்டில் சென்னை மற்றும் தூத்துக்குடி என இரண்டு இடங்களில் செயல்பட்டு வருகிறது. ஆடை ஆபரணங்கள் என அனைத்தும் நேரடியாக கொள்முதல் செய்யப்படுவதால் எங்குமே கிடைக்காத குறைந்த விலையில் நிறைவான தரத்துடன் எங்களால் விற்பனை செய்ய முடிகிறது. உங்களுக்கு கிடைக்கும் குறைந்த விலையே அப்படியே தள்ளுபடியாக வாடிக்கையாளர்களுக்கு அளித்து விடுகிறோம் தெரிவித்துள்ளார்.

நிறைந்த தரம் குறைந்த விலை என்பது தான் எங்களது கொள்கை. எங்களது வெற்றிக்கும் இது தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

தரமான பொருள், குறைவான விலை அதுதான் எங்க கொள்கை - Interview With Velavan Stores T.Anand..! | Chennai