Koottu Kuruma

தேவையான பொருட்கள்:

கேரட், பீன்ஸ் – தலா 100 கிராம்,
வெங்காயம், தக்காளி – தலா 100 கிராம், இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன், சோம்பு, பட்டை பொடி – சிறிதளவு, மிளகாய்த்தூள், உப்பு – சிறிதளவு,
எண்ணெய் – 4 டீஸ்பூன்.

அரைக்க :

தேங்காய் – 1 துருவியது,
முந்திரி – 10 கிராம்,
சோம்பு – 5 கிராம்.

தாளிக்க:

ஏலக்காய் – 2,
பிரிஞ்சி இலை – 2,
கிராம்பு – 5 பட்டை, ஜாதிபத்திரி – சிறிதளவு.

செய்முறை:

1) எண்ணெயைச் சூடாக்கித் தாளிக்கத் தேவையான பொருட்களைப் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
2) சிறிது தண்ணீர், சோம்பு, பட்டைப் பொடி, மிளகாய்த் தூள் சேர்த்து வேகவிட்டு, அரைத்த மசாலாப் பொருட்களைச் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
3) சூடான காய்கறிக் கூட்டுக் குருமா ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here