Vegetable Spring Role :
Vegetable Spring Role :

Vegetable Spring Role :

தேவையான பொருட்கள் :

1. மைதா மாவு – ஒன்றரை கப்

2. சீரகம் – 2 ஸ்பூன்

3. பூண்டு,இஞ்சி விழுது – 2 ஸ்பூன்

4. வெங்காயம் – 1

5. துருவிய கோஸ், கேரட், நறுக்கிய பீன்ஸ் – 1 சிறிய கப்

6. பன்னீர் – 1 கப்

7. எண்ணெய் – தேவைக்கு

8. உப்பு – தேவைக்கு

செய்முறை :

மைதாமாவு, உப்பு தேவைக்கு மற்றும் எண்ணெய் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிழைந்து கொண்டு 20 நிமிடம் அப்படியே விட வேண்டும்.

பிறகு அதனை சிறு சிறு துண்டுகளாக உருட்டி சிறிய சப்பாதிபோல தேய்த்து எடுத்து கொண்டு அதன் மேல் லேசாக எண்ணெய் தடவி தயாரித்து வைத்துள்ள மற்றொரு சப்பாத்தியை மேலே வைத்து கொள்ள வேண்டும்.

இப்படி மூன்று அடுக்கு வரும் படி வைத்து கொண்டு எவ்வளவு மெலிதாக தேய்க முடியுமோ அவ்வளவு மெலிதாக தேய்த்து விட்டு ஒன்று ஒன்றாக கடாயில் போட்டு லேசாக வெக வைத்து எடுத்து கொண்டு மூன்று அடுக்காக வைத்ததை தனியாக பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் சீரகம், பூண்டு,இஞ்சி போட்டு பச்சை வசம் போகும் வரை வதக்க வேண்டும்.

பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் துருவிய கோஸ், கேரட், சிறிதாக நறுக்கிய பீன்ஸ் போட்டு நன்றாக வெக விட்டு தேவைக்கு உப்பு சேர்த்து பின் தைல் வினிகர், சோயா சாஸ் சேர்த்து களரி விட்டு சிறிது நேரம் கழித்து சிறிதாக நறுக்கிய பன்னீர் போட்டு களரி விட வேண்டும்.

ஒரு சிறிய பாத்திரதில் மைதாமாவு போட்டு தண்ணீர் விட்டு கம் பதத்திற்கு தயாரித்து கொள்ள வேண்டும்.

பிறக, மைதாமாவில் தயாரித்து வைத்துள்ள ரோல் ஒன்றை எடுத்து அதில் காய்கறி கலவையை வைத்து சுற்றி கொள்ள வேண்டும். சுற்றும் பொது தயாரித்த மைதாமாவு கம் லேசாக தடவி தடவி மூடவேண்டும்.

பிறகு, வாணலில் எண்ணெய் ஊற்றி அதில் ரெடி பண்ண ரோலை பொரித்து எடுத்தால் சுவையான வெஜ் ரோல் தயார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here