vegetable soup recipe
vegetable soup recipe

Vegetable Soup :

தேவையான பொருட்கள் :

1. பீன்ஸ் – 2

2. மல்லி – சிறிது

3. கோஸ் – ½

4. கேரட் – 2

5. நூக்கல் – 2

6. பூண்டு – 1 5 பல்

7. வெங்காயம் – 2

8. வெங்காய தாள் – 1 கட்டு

9. இஞ்சி – சிறிது

10. பச்சை மிளகாய் – 2

செய்முறை :

அடுப்பில் ஒரு பெரிய பாத்திரதில் தண்ணீர் ஊற்றி அது கொதி வந்ததும் அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, கோஸ், காலிஃப்ளவர் நடு பகுதி, வெங்காய தாள் அடி பகுதி, மல்லி மற்றும் ஒரு பிடி மிளகு மற்றும் 1 பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் நூக்கல் 2 நறுக்கியது, கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்து சுமார் அரை மணி நேரம் கொதிக்க விட வேண்டும்.

அரை மணி நேரம் கழித்து, காய்கறிகள் வெந்து இருக்கும். அதனை நன்றாக மசித்து விட்டு பிறகு அதனை நன்றாக வடிக்கட்டி கொதித்த நீரை மற்றும் காய்கறிகளை தனியாக எடுத்து விட வேண்டும். பிறகு, வடித்த நீரில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.

பின், வடித்த நீரை மீண்டும் அடுப்பில் வைத்து, மிகவும் பொடியாக நறுக்கிய கேரட், வெங்காய தாள், பீன்ஸ், காலி ஃப்ளவர் எல்லாம் சேர்த்து கலக்கி விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

அடுத்து 280ml தண்ணீர் ஊற்றி 1 ஸ்பூன் கான் ஃப்ளவர் மாவு போட்டு கலக்கி சூப் கொதிக்கும் போது கலந்து கொதிக்க விட வேண்டும். பிறகு அதில் மிளகு தூள் தூவி இறக்கினால் சுவையான சூப் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here