Vegetable Parotta 
Vegetable Parotta 

Vegetable Parotta  :

பரேட்டா வீட்டில் செய்வது என்னமோ கஷ்டம்தான் இருத்தலும் ஈசியா பரோட்டா செய்து அசத்த இருக்கவே இருக்கு இந்த வெஜ் பரோட்டா. இது செய்வதும் ஈசி சாப்பிடுவதற்கும் நல்ல இருக்கும்.

தேவையா பொருட்கள் :

கோதுமை மாவு – கால் கிலோ
உருளைக்கிழங்கு – 2
வெங்காயம் – 1
தக்காளி – 1
கொத்துமல்லி, புதினா மற்றும் இஞ்சி – சிறிதளவு
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
எண்ணெய், உப்பு – தேவைக்கு

செய்முறை :

கோதுமை மாவில் உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து பிசைந்து எடுத்து கொள்ள வேண்டும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து கட்டி இல்லாமல் நசுக்கி இத்துடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மிளகாய் தூள் மற்றும் சிறிது கொத்துமல்லி, புதினா அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.

பிசைந்து வைத்த மாவை எடுத்து அதை சிறிய வட்டவடிவில் செய்து, அதன் மேல் சிறிதளவு எண்ணெய் ஊற்றி தடவி அதில் தயார் செய்து வைத்துள்ள காய்கறி கலவையை வைத்து மூடி விட வேண்டும்.

காய்கறி வைத்து மூடு போட்ட உருண்டையை மீண்டும் லேசாக தேய்த்து அதனை சூடான தவாயில் போட்டு இரு பக்கமும் எண்ணெய் விட்டு வேக வைத்து எடுத்தால் சத்தான வெஜ் பரோட்டா தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here