Veg Bread Uppuma
Veg Bread Uppuma

Veg Bread Uppuma :

தேவையான பொருட்கள் :

1. பிரட் – 7 துண்டுகள்

2. பச்சை பட்டாணி – 1 பிடி

3. கேரட் – 1

4. உருளை கிழங்கு – 2

5. எண்ணெய் – தேவைக்கு

6. கடுகு – ½ ஸ்பூன்

7. கறிவேப்பிலை – சிறிது

8. மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்

9. மிளகாய் தூள் – ½ ஸ்பூன்

10. உப்பு – ½ ஸ்பூன்

11. கரம் மசாலா – கால் ஸ்பூன்

12. எலும்பிச்சை சாரு – ½ ஸ்பூன்

13. மல்லி இலை – சிறிது

செய்முறை :

கடாயில் எண்ணெய் விட்டு அதில் பிரட் துண்டுகளை நறுக்கி பொரித்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு, பச்சை பட்டாணி, கேரட் மற்றும் உருளை கிழங்கை வெக வைத்து கொள்ள வேண்டும்.

அடுத்து, கடாயில் எண்ணெய் விட்டு அதில் கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம் போட்டு ஓரளவிற்கு வதங்கியதும் அதில் கறிவேப்பிலை போட்டு பின் அதில் வெக வைத்துள்ள காய் மற்றும் பச்சை பட்டாணியை சேர்த்து கொள்ள வேண்டும்.

பிறகு, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு பிரட்டிவிட்டு கால் ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து கிளறி பின் அதில் வெறுத்த பிரட் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

பின் அதில் 2 ஸ்பூன் எலும்பிச்சை சாரு சேர்த்து கிளறி விட்டு மல்லி இலை தூவி இறக்கினால் சுவையான வெஜ் பிரட் உப்புமா தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here