வீட்ல விசேஷம் படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் ஆர் ஜே பாலாஜி இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் வீட்ல விஷேசம். போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி நாயகியாக நடிக்க சத்யராஜ் ஊர்வசி, புகழ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வீட்ல விசேஷம் படம் எப்படி இருக்கு?? விமர்சனம் இதோ

இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ஒரு படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆக இது திரைப்படம் வெளியாகி உள்ளது என்பதால் படத்தின் கதை பற்றி சொல்ல வேண்டியதில்லை. இருப்பினும் ஷாட்டாக சொல்ல வேண்டும் என்றால் ஆர் கே பாலாஜி அப்பா அம்மாவாக சத்யராஜ் மற்றும் ஊர்வசி நடிக்க திடீரென ஊர்வசி கர்ப்பம் ஆகி விடுகிறார்.

ஆர் ஜே பாலாஜி கல்யாணம் பண்ணி பேரன் பேத்தி எடுக்க வேண்டிய வயதில் ஊர்வசி கர்ப்பமாகியதை கேட்டு குடும்பத்தார் என்னவெல்லாம் செய்கிறார்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்? என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் : நடிப்பு ஆர் ஜே பாலாஜி டைமிங் கவுண்டர் கொடுத்து அவருடைய கதாபாத்திரத்தை செமையாக நடித்துக் கொடுத்துள்ளார்.

சத்யராஜ் சும்மாவே குசும்புத்தனம் செய்வார். இந்த படமும் அவருடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு போல அமைந்து இருப்பதால் அவரும் ஆக்டிங்கில் பின்னி பெடல் எடுத்து உள்ளார். ஊர்வசி அம்மாவாக எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார். அபர்ணா பாலமுரளி கியூட்டான நடிப்பை கொடுத்துள்ளார்.

வீட்ல விசேஷம் படம் எப்படி இருக்கு?? விமர்சனம் இதோ

படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு மேலும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. படம் முழுவதும் கலகலப்பான காட்சிகளுடன் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பது மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைக்கிறது.