விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தின் சென்சார் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Veerame Vaagai Soodum Censored Details : தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் என பன்முகம் திறமைகளைக் கொண்டு வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வீரமே வாகை சூடும். அறிமுக இயக்குனர் து. பா சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படம் உலகம் முழுவதும் பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது வீரமே வாகை சூடும் படத்திற்கு சென்சார் பணிகள் முடிவடைந்து யுஏ சான்றிதழ் கிடைத்து இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த தகவலை நடிகர் விஷாலும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் டீஸர் டிரைலர் ஆகியவை இணையத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.