Veeram Hindi Remake Update

இந்தியில் தல அஜித்தின் வீரம் திரைப்படம் ரீமேக் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Veeram Hindi Remake Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் இறுதியாக நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்திற்கு முன்னதாக அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விசுவாசம் என நான்கு படங்களில் நடித்தார்.

இந்தியில் ரீமேக்காகும் தல அஜித்தின் திரைப்படம்... நாயகியாக நடிக்கப் போவது யார் தெரியுமா? ரசிகர்களை கொண்டாட வைத்த தகவல்

அண்ணன்-தம்பி பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான வீரம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தமிழ் கிடைத்த வரவேற்பால் இத்திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது.

அஜித் நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய் குமர் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில் அவர் படத்திலிருந்து விலகிக் கொண்டதால் சல்மான் கான் நடிக்க உள்ளார். சல்மான் கானுக்கு ஜோடியாக தளபதி 65 பட நாயகி பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. மேலும் லாக் டவுன்
முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியில் ரீமேக்காகும் தல அஜித்தின் திரைப்படம்... நாயகியாக நடிக்கப் போவது யார் தெரியுமா? ரசிகர்களை கொண்டாட வைத்த தகவல்