vedhika aand Vijay
vedhika aand Vijay

Vedhika aand Vijay : ‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர். திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம்,

சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.

தனது தந்தையின் கரம் பற்றி திரை துறையில் காலடி எடுத்து வைத்தாலும், அதன்பின் தனக்கான பாதையை தனது விடாமுயற்சியால், தானே அலங்கரித்து இன்று ஆளப்போறான் தமிழன் என எல்லைகளை கடந்து வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்.

இவர் அதிகம் வெளியில் தலைக்காட்ட மாட்டார். எனினும் தனக்கு ஒரு படம் பிடித்திருந்தால் உடனடியாக அந்த படக்குழுவுக்கு ஃபோன் செய்து பாராட்டுவார்.

அண்மையில் பரியேறும் பெருமாள், கே.ஜி.எஃப் படத்திற்கு இப்படி பாராட்டியிருந்தார்.
இதேபோல் 2014-ல் காவியத்தலைவன் படம் வெளியானபோது அந்த படத்தை பாராட்டி விஜய் ஒரு வீடியோ வெளியிட்டார்.

பிரபல நடிகையை வீடியோவின் மூலம் பாராட்டிய விஜய் – எத்தனை பேருக்கு இது தெரியும்?

அதில் வேதிகாவின் நடிப்பை வெகுவாக பாராட்டியிருந்தார். இதை அண்மையில் ஒரு பேட்டியில் நினைவுக் கூர்ந்த வேதிகா, இதுதான் தனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு என்றும் கூறியிருந்தார்.