Vedhalam Telungu Remake

தல அஜித்தின் வேதாளம் திரைப்படம் தெலுங்கிலும் ரீமேக் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vedhalam Telungu Remake Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

தல அஜித் நடிக்கும் நடிகர்களின் திரைப்படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

அந்த வகையில் இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்த வேதாளம் திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது.

இந்த படத்தில் நடிகர் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்க உள்ளார். பில்லா படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கிய மெஹர் ரமேஷ் இயக்கவுள்ளார்.

நடிகர் சிரஞ்சீவியின் பிறந்த நாளன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் தற்போது மலையாள சினிமாவில் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் படத்தின் ரீமேக் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.