Vazhaithandu Soup : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Vazhaithandu Soup :

தேவையான பொருட்கள்: வாழைத்தண்டு – ஒரு கப்,

தக்காளி -1,மிளகாய்வற்றல் – 2,
மஞ்சள்தூள் – சிறிதளவு,
சீரகம் – 1 டீஸ்பூன்,
மிளகு – 5,
சின்ன வெங்காயம் – 5,
இஞ்சி – ஒரு துண்டு,
பூண்டு பல் – 2,
கொத்தமல்லி – தேவையான அளவு ,
கருவேப்பிலை -தேவையான அளவு, தனியா – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

1) வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு சிறு தீயில் கொதிக்க விட வேண்டும்.

2) தனியா, சீரகம், மிளகு மூன்றையும் தனித்தனியாக வறுத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.

உப்பை பயன்படுத்தினால், வீட்டில் செல்வ நிலை அதிகரிக்குமா?

3) வெங்காயம், தக்காளி, மிளகாய் வற்றல், கொத்தமல்லி, கறிவேப்பிலை இஞ்சி, பூண்டு ஆகிய அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.

4) ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும்.

5) வாழைத்தண்டு பாதி வெந்து இருக்கும் போது வதக்கிய கலவையையும், பொடி செய்த தூள், மஞ்சள், உப்பு சேர்த்து மீண்டும் நன்றாகக் கொதிக்க விட வேண்டும்.

6) கொத்தமல்லி, கறிவேப்பிலை சிறிது தூவி இறக்கவேண்டும்.

7) சுவையான வாழைத்தண்டு சூப் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here