Vazhai Thuruval :
Vazhai Thuruval :

Vazhai Thuruval :

தேவையான பொருட்கள் :

1. வாழைக்காய் – 1

2. தேங்காய் துருவல் – 1 கப்

3. கடுகு, உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்

4. வெங்காயம் – 1

5. காய்ந்த மிளகாய் – 2

6. கறிவேப்பிலை – சிறிதளவு

7. உப்பு, எண்ணெய் – தேவைக்கு

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் (அடி கனமானது) தண்ணீர் விட்டு அதில் வாழைக்காயை போட்டு 10 நிமிடம் வரை வெகவைத்து கொள்ள வேண்டும்.

பின், அதனை தோல் நீக்கி துருவிக்கொள்ள வேண்டும். பிறகு வாழைக்காய் துருவளுடன் தேங்காய் துருவல் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்து, ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் அதில் கடுகு,உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதங்கிய உடன் அதில் உப்பு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்த வாழைக்காய் துருவலை சேர்த்து கிளறி இறக்கினால் ருசியான வாழைக்காய் துருவல் ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here