Vazaikai Varuval :
Vazaikai Varuval :

Vazaikai Varuval :

தயிர் சாதம் மற்றும் புளி சாதத்திருக்கு மிகவும் பொருத்தமான துணை உணவு இந்த வாழைக்காய் வறுவல். மற்றும் இந்த வறுவல் பார்பதற்க்கு மீன் வறுவல் போன்றே இருக்கும். இந்த வாழைக்காய் வறுவல் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

தேவையான பொருட்கள் :

1. வாழைக்காய் – 2

2. எண்ணெய், உப்பு – தேவைக்கு

3. சோம்பு – 1 ஸ்பூன்

4. கறிவேப்பிலை – சிறிதளவு

5. பூண்டு – 8 பல்

6. கறி மசாலா தூள் – 2ஸ்பூன்

7. மல்லி தூள் – 1 ஸ்பூன்

8. மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

9. பெருங்காயம் – 1 சிட்டிகை

10. உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்

செய்முறை :

சோம்பு, பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மொறப்பாக அரைத்து வைத்துகொள்ள வேண்டும்.

தோல் சீவி நீட்டு வாக்கில் நறுக்கி அதனை எண்ணெயில் பாதி வேக பொரித்து தனியாக எடுத்துகிக்கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் உளுந்து, பெருங்காயம் போட்டு தாளித்து பின் அதில் அரைத்து வைத்துள்ள சோம்பு கலவையை போட்ட பிறகு அதில் கறி மசாலா தூள், மல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.

பிறகு அதில் நீட்டாக நறுக்கி பொரித்து வைத்துள்ள வாழைக்காயை போட்டு மசாலா பொருட்கள் நன்றாக வாழைக்காயில் சேரும் வரை கலர வேண்டும்.

பிறகு சிறிது கறிவேப்பிலை தூவி இறக்கினால் சுவையான மீன் வறுவல் போற்று இருக்கும் வாழைக்காய் வறுவல் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here