
சிவகார்த்திகேயன் மகள் ஆரதனா கனா படத்தில் தன்னுடைய அப்பாவுடன் சேர்ந்து பாடியிருந்த பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
பாடலாசிரியரும் நடிகருமான அருண் ராஜ் காமராஜ் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷை நாயகியாக வைத்து கனா என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் சிவாவும் அவருடைய குட்டி மகள் ஆரதனாவும் சேர்ந்து வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை பாடி இருந்தனர். இந்த பாடல் சமூக வளையதளங்களிலும் குழந்தைகள் மத்தியிலும் செம வரவேற்பை பெற்று வந்தது.
தற்போது யூ ட்யூபில் இப்பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மெகா சாதனையை படைத்துள்ளது.