வாத்தி திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியிட்டுருக்கான நேரம் குறித்த அப்டேட் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தற்போது பிசியாக நடித்து வரும் இவர் இதற்கிடையில் வெங்கி அட்லூரில் இயக்கத்தில் உருவாகி இருந்தா ‘வாத்தி’ திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

இணையதளத்தில் ட்ரெண்டிங் ஆகும்… வாத்தி திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட்.!

சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி நேரடியாக வெளியாக உள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி இருந்த இப்படத்தில் இருந்த முதல் பாடல் அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து இருந்த நிலையில் இப்படத்தில் யுக பாரதி எழுதியிருக்கும் செகண்ட் சிங்கிள் பாடலான ‘நாடோடி மன்னன்’ என்னும் பாடல் ஜனவரி 17 ஆம் தேதியான இன்று வெளியாக இருப்பதாக படக்குழு அண்மையில் தெரிவித்திருந்தது.

இணையதளத்தில் ட்ரெண்டிங் ஆகும்… வாத்தி திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட்.!

தற்போது இப்பாடலின் வெளியீட்டிற்கான நேரம் குறித்து அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்பாடல் இன்று மாலை 4:04 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு புதிய போஸ்டருடன் தெரிவித்துள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.