Vasanthabalan Recovered from Covid19

கொரோனாவில் இருந்து நீண்ட இயக்குனர் மீண்டும் வாழ வருகிறேன் என அதிரடியாக பதிவிட்டுள்ளார்.

Vasanthabalan Recovered from Covid19 : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்று இரண்டாவது அலை காரணமாக திரையுலகப் பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் பூரண குணமடைந்து வீடு திரும்புகின்றனர் அதேசமயம் நாளுக்கு நாள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட பிரபலங்களை இழந்து வருவதும் வாடிக்கையாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது கொரானாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வசந்தபாலன் தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் மீண்டும் வாழ வருகிறேன் என பதிவு செய்துள்ளார்.