Vaasal

▪ வீட்டு வாசல் அசுத்தமாகவும், கவனிப்பாரற்றும் இருக்குமாயின் வீட்டில் மகிழ்ச்சியையும், மங்களத்தையும் தரவல்ல ஸ்ரீதேவி
வீட்டினுள் புக மாட்டாள் என்பது ஐதீகம்.

▪ வீட்டு வாசல் புனிதமானது. அதனால்தான் வீட்டு வாசல் முற்றத்தில் கோலம் போடுகிறார்கள். வாசலில் மாவிலை கட்டி புனிதப்படுத்துகிறார்கள்.

▪ வீடும், அதன் வாசலும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஸ்ரீதேவி வீட்டில் குடி கொள்வாள்.

▪ வீட்டு வாசலில் மாவிலை கட்டுவதால் புனிதமாகின்றது. மாவிலையை முன்பக்கம் வளைத்து தொங்க விடுவது தேவர்களை தலைவணங்கி வரவேற்பதாக அர்த்தம். மாவிலையை பின்பக்கம் வளைத்து தொங்க விடுவது தேவர்களை ஸ்ரீதேவியின் வரவை விரும்பவில்லை என அர்த்தம்.

▪ ஸ்ரீதேவி வரும் வாசலை நோக்கி கால் நீட்டினால் ஸ்ரீதேவி தன் வருகையை வீட்டார் விரும்பவில்லை என கருதி திரும்பிச் சென்று விடுவாள் என்பதனால் தான், வீட்டு வாசலுக்கு நேராகக் கால் நீட்டக் கூடாது.

▪ வீட்டிற்னுள் ஸ்ரீதேவி வராவிட்டால் மூதேவி குடி கொள்வாள் என்பது ஐதீகம். மூதேவி வீட்டினுள் குடிகொண்டால் மகிழ்ச்சி குன்றும். துன்பம் பெருகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here