Varma

பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான வர்மா திரைப்படம் OTT வழியாக வரும் ஆறாம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Varma OTT Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது ஒரே மகனான துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

ஆனால் இதற்கு முன்னதாக வர்மா என்ற பெயரில் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கை இயக்குனர் பாலா இயக்கினார். ஆனால் இப்படம் கொஞ்சமும் அர்ஜுன் ரெட்டி படத்தோடு ஒத்துப் போகவில்லை என படக்குழு இதனை கிடப்பில் போட்டது. இது பாலாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

இந்த நிலையில் தற்போது பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான வர்மா திரைப்படம் வரும் அக்டோபர் 6ம் தேதி சிம்பிளி சௌத் (Simply South ) என்ற OTT தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தனித்துவமான இயக்குனரான பாலா இயக்கத்தில் உருவான திரைப்படம் குப்பைக்கு போனது ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய நிலையில் தற்போது இப்படம் வெளியாக உள்ளது.

ஆதித்ய வர்மா பெஸ்ட்டா?? பாலா இயக்கிய வர்மா பெஸ்ட்டா?? என்பதை அறிந்து கொள்ள ஒட்டுமொத்த சியான் விக்ரம் ரசிகர்களும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.