Varma

Varma : துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகி பாலா இயக்கத்தில் நடித்த வர்மா திரைப்படத்தை கிடப்பில் போட்டு விட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவரது மகன் துருவ் விக்ரம் பாலா இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள நடித்துள்ள திரைப்படம் வர்மா.

தெலுங்கில் வெளியாகி மெகா ஹிட்டாகி இருந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இந்த திரைப்படம் இம்மாதத்தில் வெளியாக இருந்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான E4 எண்டெர்டைன்மெண்ட் அதிர்ச்சிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் அர்ஜுன் ரெட்டியின் தமிழ் வெர்சனாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் இறுதி பாதிப்பு திருப்தி அளிக்கும் விதமாக இல்லை. ஆதலால் இந்த படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியை கை விடுகிறோம்.

துருவ் விக்ரமையே மீண்டும் ஹீரோவாக வைத்து புதிய இயக்குனர் மற்றும் டீமுடன் இதே படத்தை முதலில் இருந்து படப்பிடிப்பை நடத்தி வரும் ஜூன் மாதத்தில் வெளியிட உள்ளோம்.

சிறந்த படமாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பணம் விரயம் ஆனாலும் பரவாயில்லை என இந்த முடிவை எடுத்துள்ளோம் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இயக்குனர் மற்றும் படக்குழு குறித்த அறிவிப்பையும் விரைவில் வெளியிடுவோம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Varma Press Release

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.