Varma Movie Review

பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த வர்மா திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Varma Movie Review : தெலுங்குவில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இந்த படத்தின் தமிழ் ரீமேக்காக உருவான திரைப்படம் தான் வர்மா. இயக்குனர் பாலா இப்படத்தை இயக்கியிருந்தார். E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.

ஆனால் இப்படம் அர்ஜுன் ரெட்டி படத்தோடு கொஞ்சமும் ஒத்து போகவில்லை என தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை குப்பையில் வீசியது. பின்னர் அர்ஜுன் ரெட்டி படத்தின் உதவி இயக்குனர் கிரீசாய இயக்கத்தில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் புதிதாக படமாக்கி வெளியிட்டனர்.

இப்படம் தியேட்டரில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது வர்மா திரைப்படம் OTT வழியாக வெளியாகியுள்ளது. இது பற்றிய விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

கதைக்களம் :

அர்ஜுன் ரெட்டி, ஆதித்ய வர்மா ஆகிய படங்களின் கதை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். அதுதான் பாலாவும் கதைக்களமாகக் கொண்டு இந்த படத்தை உருவாக்கியுள்ளார். படத்தில் நாயகியின் பெற்றோர் ஜாதியை காரணம் காட்டி விக்ரமுக்கு திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிக்கின்றனர்.

படத்தை பற்றிய அலசல்

நடிப்பு :

துருவ் விக்ரம், வங்காள நடிகை மேகா சவுத்ரி நாயகியாக நடித்துள்ளார். இருவரின் நடிப்பும் யதர்த்தமாகவும் அழகாகவும் அமைந்து படத்திற்கு வலு சேர்த்துள்ளது.

இசை :

ரதனின் இசையில் இன்னும் வலு சேர்க்கலாம். பாடல்கள் சுமார் ரகம்.

ஒளிப்பதிவு :

எம் சுகுமாரின் ஒளிப்பதிவு காட்சிகளை ரசிக்கும்படியாக படமாக்கி கொடுத்துள்ளன.

இயக்கம் :

அர்ஜுன் ரெட்டி படத்தின் கதையை அப்படியே அழகாக படமாக்கி கொடுத்துள்ளார் இயக்குனர் பாலா. தாடியும் மீசையும் முடியுமாக இருக்கும் துருவ் விக்ரமின் கெட்டப்பை மட்டும் கொஞ்சம் அழகாக காட்டி இருக்கலாம்.

ஆதித்ய வர்மா படத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் போது எமோஷன், ஆக்சன் என அனைத்தும் இந்த படத்திலும் அழகாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது.

ஆதித்ய வர்மா Vs வர்மா வித்தியாசங்கள் :

  1. நாயகியின் பெற்றோர் ஜாதியை காரணம் காட்டி திருமணம் செய்ய வைக்க மறுப்பு தெரிவிக்கின்றனர். ஆதித்ய வர்மாவில் பாட்டி இறந்து விடுவார். வர்மா படத்தின் இறுதியில் அப்பா இறந்து விடுகிறார்.
  2. இந்த படத்தில் வீட்டு வேலைக்காரியாக இருக்கும் ஈஸ்வரி ராவ் துருவ் விக்ரமை தன்னுடைய மகனாகவே பார்த்துக் கொள்கிறார். ஆதித்ய வர்மா படத்தில் இப்படியான கதாபாத்திரம் இருக்காது.

தம்ஸ்ப் அப் :

  1. துருவ் விக்ரமின் எதார்த்தமான நடிப்பு.
  2. பாலாவின் இயக்கம்
  3. படத்தின் எமோஷன், ஆக்சன்

தம்ப்ஸ் டவுன் :

  1. இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
REVIEW OVERVIEW
வர்மா விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
varma-movie-reviewமொத்தத்தில் வர்மா பாலாவின் ஸ்டைலில் ரசிக்க வேண்டிய ஒரு படம் தான்.