Varma Movie Release Update
Varma Movie Release Update

பாலா இயக்கத்தில் வெளியான வர்மா திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Varma Movie Release Update : தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பாலா. இவருடைய படங்களின் மூலமாகத்தான் சூர்யா விக்ரம் போன்ற நடிகர்கள் திரையுலகின் முக்கிய இடத்தை தொட்டார்கள்.

தனக்கு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த பாலா தான் தன் மகன் துருவ் விக்ரமுக்கும் ஆரம்பப் புள்ளியாக இருக்க வேண்டுமென கூறி வர்மா என்ற படத்தை உருவாக்க காரணமாக அமைந்தார்.

விக்ரமின் கோரிக்கையை ஏற்று பாலா இயக்கத்தில் வர்மா என்ற திரைப்படமும் உருவானது. படம் கொஞ்சம் கூட அர்ஜுன் ரெடி படத்தோடு ஒன்றிப் போவதுதான் இந்த படத்தை கைவிட்டனர்.

மாஸ்டர் பட ரிலீஸ் எங்களுக்கே பெரிய ஏமாற்றம் தான்.. லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்.!!

இதனையடுத்து ஆதித்திய வர்மா என்ற பெயரில் மீண்டும் முதலிலிருந்தே படமாக்கப்பட்டு அதன் பின்னர் ரிலீஸ் ஆனது.

இப்படியான நிலையில் தற்போது பாலா இயக்கிய வர்மா திரைப்படத்தை அமேசான் பிரைம் வீடியோ வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த படம் ஆயுத பூஜை நாள் அன்று வெளியாகும் எனவும் கூறப்பட்டு வருகிறது.

வர்ணா படத்தின் டீசர் வெளியாகி இருந்த போதே அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.