Varma Heroine

Varma Heroine : துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க போவது யார் என்பதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பாலா இயக்கத்தில் அறிமுக நாயகனாக துருவ் விக்ரம் நடித்திருந்த திரைப்படம் வர்மா. அர்ஜுன் ரெட்டி ரீமேக்காக உருவாகி இருந்த திரைப்படம் அந்த படத்துடன் கொஞ்சமும் ஒத்து போகாததால் குப்பைக்கு போனது.

இதனையடுத்து புதிய குழுவுடன் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில் தற்போது துருவ்விற்கு ஜோடியாக நடிக்க போவது யார் என்பதை அறிவித்துள்ளது. அக்டோபர் புகழ் பெனிதா சந்து ஹீரோயினியாக நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.