நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தின் புதிய போட்டோ வெளியாகியுள்ளது. அதில் ஹேன்சமான லுக்கில் இருக்கும் விஜயின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ரசிகர்களால் அன்போடு இளையதளபதி என்று அழைக்கப்பட்டு வருபவர் தான் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜயுடன் இணைந்து நடிகை ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, சங்கீதா, பிரபு, சரத்குமார், ஷாம் உள்ளிட்ட பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்து வருகின்றனர். தமன் இசையில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது.

ஹண்ட்ஸம் லுக்கில் விஜய்… வாரிசு புதிய Photo வைரல்!.

அண்மையில் இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்ததை தொடர்ந்து தற்போது மீண்டும் வாரிசு திரைப்படத்தில் இருக்கும் விஜயின் புதிய போட்டோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் கேமராவுடன் ஹேன்சமான லுக்கில் இருக்கும் விஜயின் இந்த லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களால் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.