வாரிசு திரைப்படத்தின் டிரைலர் இந்தியிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாக உள்ளது.

இந்தியிலும் மாஸ் காட்டி வரும் வாரிசு ட்ரெய்லர்!!… உற்சாகத்துடன் கமெண்ட்களை குவித்து வரும் ரசிகர்கள்.!

பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. அதன் பிறகு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருந்த வாரிசு படத்தின் டிரைலர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அண்மையில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தியிலும் மாஸ் காட்டி வரும் வாரிசு ட்ரெய்லர்!!… உற்சாகத்துடன் கமெண்ட்களை குவித்து வரும் ரசிகர்கள்.!

இந்நிலையில் வாரிசு படத்தின் ட்ரெய்லரை படகுழு இந்தியிலும் ரீமிக்ஸ் செய்து வெளியிட்டுள்ளது. வரும் ஜனவரி 13ஆம் தேதி இந்தியில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் வீடியோவை கண்டு உற்சாகமடைந்த தளபதியின் ரசிகர்கள் தங்களது கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.