வாரிசு திரைப்படத்திற்கு தெலுங்குவில் 35 சதவீத தியேட்டர் மட்டுமே தான் கிடைக்கும் என தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் ஒருவர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து அடுத்ததாக வாரிசு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

வாரிசு படத்துக்கு 35% தியேட்டர் தான், விஜய்க்கு அவ்வளவு தான் மரியாதை - பிரபல தயாரிப்பாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்.!!

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாக்கியுள்ள இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு எஸ் தமன் இசையமைக்க தில் ராஜு தயாரித்துள்ளார்.

இந்த படத்தை 2023 பொங்கலுக்கு வெளியிட படக்குழு தீவிரமாக வேலை செய்து வருகிறது. தமிழில் வாரிசு படத்துக்கு போட்டியாக அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாவதால் வழக்கமாக விஜய் படத்திற்கு கிடைக்கும் தியேட்டர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தெலுங்குவில் இந்த படத்திற்கு போட்டியாக முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆக இருப்பதால் அங்கு குறைந்த அளவிலான தியேட்டர்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என சொல்லப்பட்டு வந்தது.

வாரிசு படத்துக்கு 35% தியேட்டர் தான், விஜய்க்கு அவ்வளவு தான் மரியாதை - பிரபல தயாரிப்பாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்.!!

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் அளித்துள்ள தகவலின் படி வாரிசு திரைப்படம் தெலுங்குவில் கட்டாயம் ரிலீஸ் ஆகும். ஆனால் அது தெலுங்குவில் டப்பிங் திரைப்படம் என்பதால் 35 சதவீத தியேட்டர்கள் மட்டும்தான் ஒதுக்கப்படும் என்கிறார்கள். தெலுங்கு திரையுலக விநியோகஸ்தர்கள் விஜய்க்கு அவ்வளவுதான் மரியாதை என கூறுவதாக தெரிவித்துள்ளார்.