தெலுங்கில் ரசிகர்கள் கொண்டாடி வரும் வாரிசு திரைப்படத்தின் வீடியோ இணையத்தை அதிரவிட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் மாபெரும் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் தமிழில் கடந்த 11ஆம் தேதி வெளியானது. ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி திரை பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கியிருந்தார்.

தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்படும் வாரிசு!!… இணையத்தை அதிரவிடும் வீடியோ வைரல்.!

தில் ராஜூ தயாரிப்பில் தமன் இசையமைப்பில் வெளியான இப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் முன்பாக வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ‘வாராசுடு’ என்ற பெயரில் இன்று காலை தெலுங்கிலும் வெளியானது.

தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்படும் வாரிசு!!… இணையத்தை அதிரவிடும் வீடியோ வைரல்.!

இந்நிலையில் இப்படத்தில் விஜயின் ஓப்பனிங் சீனுக்கு தெலுங்கு ரசிகர்கள் திரையரங்கை அதிர வைக்கும் அளவிற்கு கத்தி ஆர்பாட்டம் செய்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் நடிகரான விஜய்க்கு தெலுங்கில் கிடைக்கப்படும் மாபெரும் வரவேற்பை தமிழ் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து ட்விட்டரை தெறிக்க விட்டு வருகின்றனர்.