நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வாரிசு படத்தின் வெற்றி கொண்டாட்டம் நடந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியான திரைப்படம் வாரிசு.

நட்சத்திர ஓட்டலில் நடந்து முடிந்த வாரிசு வெற்றி கொண்டாட்டம் - யாரெல்லாம் கலந்து கொண்டார்கள் தெரியுமா?

தில் ராஜு தயாரிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், நடிகர் சாம், யோகி பாபு என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

படம் விமர்சன ரீதியாக கலமையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலில் உலகம் முழுவதும் 100 கோடியை தாண்டி சாதனை படைத்து வருகிறது.

நட்சத்திர ஓட்டலில் நடந்து முடிந்த வாரிசு வெற்றி கொண்டாட்டம் - யாரெல்லாம் கலந்து கொண்டார்கள் தெரியுமா?

இப்படியான நிலையில் தில் ராஜு இயக்குனர் வம்சி தளபதி விஜய் உட்பட இ சி ஆர் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் வாரிசு படத்தில் வெற்றியை ஒன்று கூடி கொண்டாடியுள்ளனர். இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாக்கியுள்ளது.